உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலாம்பட்டி அருகே, சமேத மாட்டுப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பூலாம்பட்டி அருகே, சமேத மாட்டுப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி: பூலாம்பட்டி அருகே, வாச்சம்பள்ளி மலைஉச்சியிலுள்ள, பாமா,  ருக்மணி சமேத மாட்டுப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி, நான்கு நாளாக  நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 4ல்), தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று 5ம் தேதி காலை, 8:00 மணிக்கு, புனித நீரை, கோபுர கலசங்களுக்கு ஊற்றி, ஆச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். தொடர்ந்து, அந்த நீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். சுற்றுவட்டார பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !