ஓமலூர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரூ.3 கோடியில் திருப்பணி தொடக்கம்
ஓமலூர்: நங்கவள்ளியில், பழமையான லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகம், 1989ல் நடந்தது. சிவன், பெருமாள், ஒரே வளாகத்தில் உள்ளது, கோவிலின் சிறப்பு. மூலவர் சுயம்பு மூர்த்தியாக, நரசிம்மர் உள்ளார்.
ஆனால், கோவில் சிதில மடைந்ததால், புனரமைப்பு பணி மேற்கொள்ள, பக்தர்கள், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணி தொடக்க விழா, நேற்று 5ல், செயல் அலுவலர் ராஜா தலைமையில் நடந்தது. நரசிம்ம சுவாமி ஆலய மண்டபத்தில், ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. உபயதாரர் கள், திருப்பணி நிர்வாகி கள், உறுப்பினர்கள், பக்தர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, பணியை தொடங்கினர். கோபுரம் புதுப்பித்தல், தரைத்தளத்தில் கல் பதித்தல், மேல்நிலை, கீழ்நிலை தண்ணீர் தொட்டிகள், அன்னதான மண்டபம், நவீன கழிப்பறை, குளியல் அறைகள் கட்டப் படவுள்ளதாக, திருப்பணிக்குழு தலைவர் வெங்கடாசலம் தெரிவித்தார்.