கல்வடங்கம், பூலாம்பட்டியில் 4 நாளில் 1,475 விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED :2339 days ago
இடைப்பாடி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, நான்கு நாளில், கல்வடங்கம், பூலாம்பட்டி காவிரி யாற்றில், 1,475 சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலம் மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகளில், பெரும்பாலானவை, கல்வடங்கம், பூலாம்பட்டி காவிரியாற்றில், பக்தர்கள் கரைத்து வருகின்றனர். நான்காம் நாளான நேற்று 5ம் தேதி, கல்வடங்கத்தில், 45 சிலைகள், பூலாம்பட்டியில், ஏழு சிலைகள் கரைக்கப்பட்டன.