உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் அருகே, பால் வடியும் வேப்ப மரம்: பக்தர்கள் பரவசம்

ராசிபுரம் அருகே, பால் வடியும் வேப்ப மரம்: பக்தர்கள் பரவசம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், பக்தர்கள்  பரவசமடைந்தனர். ராசிபுரம், ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 69;  விவசாயி. இவரது தோட்டத்தில் பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளன. நேற்று  5ம் தேதி காலை, அவர் தோட்டத்திற்கு சென்றபோது, வேப்பமரத்திலிருந்து வெள்ளை படர்ந்ததுபோல், பால் போன்ற திரவம் வருவது தெரிந்தது. இதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள், மரத்திற்கு சிவப்பு துணி கட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட தொடங்கினர். மாலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. சுற்றுவட்டார மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !