உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரைத் திருவிழாவிற்குப் பின் புதிய கொடிமரம்!

மதுரை சித்திரைத் திருவிழாவிற்குப் பின் புதிய கொடிமரம்!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியில், ரூ.15 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கொடிமரம் சித்திரைத் திருவிழாவிற்கு பின் வைக்கப்படவுள்ளது. இக்கோயிலில், திருவிழா துவங்கியதை அறிவிக்கும் விதமாக, சுவாமி சன்னதி எதிரேயுள்ள பழமையான கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. யார் காலத்தில் இம்மரம் செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. பல நூற்றாண்டு பழமையான தேக்கு வகையைச் சேர்ந்த இந்த மரத்தில், ஆங்காங்கே பழுது ஏற்பட்டது. இதனால், 62 அடி உயரத்திற்கு புதிய தேக்கு மரம் வாங்கப்பட்டது. ஆகமவிதிப்படி செதுக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. மொத்த மதிப்பு ரூ.15 லட்சம். இம்மரத்தில் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியை ஏற்ற கோயில் நிர்வாகம் முதலில் திட்டமிட்டது. ஆனால் பழைய மரத்தை அகற்றி, புதுமரத்தை ஊன்றி, கான்கிரீட் அமைக்க குறைந்தது ஒன்றரை மாதங்களாகும் என்பதால், சித்திரைத் திருவிழாவிற்கு பின் புதிய மரத்தை ஊன்ற நிர்வாகம் முடிவு செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !