முத்தண்ணன் குளத்தில் சிலைகள் விசர்ஜனம்
ADDED :2228 days ago
கோவை:இந்து அமைப்புகள் சார்பில், 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கோவை முத்தண்ணன் குளத்தில், நேற்று விசர் ஜனம் செய்யப்பட்டன.விசர்ஜனத்தை முன்னிட்டு, 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த, 220 மற்றும் பொதுமக்கள் சார்பில் என, 250க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. விசர்ஜனத்தை முன்னிட்டு, நேற்று நகரின் பல்வேறு பகுதிகளிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.