உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் மகாகும்பாபிஷேக விழா

மேட்டுப்பாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் மகாகும்பாபிஷேக விழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே, ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவை அடுத்து, 48 நாட்கள் நடைபெறும், மண்டல பூஜை துவங்கியது. மேட்டுப் பாளையம் அடுத்த, சிறுமுகை அருகே இடுகம்பாளையத்தில், அனுமந்தராய ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிந்து, நேற்று முன் தினம் (செப்., 5ல்) மகாகும்பாபி ஷேகம் நடந்தது.

இதையடுத்து, 48 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை துவங்கியது. இதில், ஒவ்வொரு நாளும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !