சித்தானந்த சுவாமியின் 105வது மகா குரு பூஜை
காரைக்கால்: காரைக்கால் அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தானந்த சுவாமியின் 105வது மகா குரு பூஜை நடைபெற்றது.
காரைக்கால் அக்கரைவட்டம் கிராமத்தில் சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இங்கு 105வது ஆண்டு மகா குருபூஜை மிக விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. பின் திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை திருமலைராயன் ஆற்றிலிருந்து பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் ஊர்வலத்தையும் கொண்டுவந்து சித்தானந்தவிற்கு அபிஷேகம் நடந்தது.பின் காலை 11 மணிக்கு அசுவத்பூஜை. கோபூஜை. கஜபூஜைகள் நடந்தது.அதைத் தொடர்ந்து சித்தரின் ஜீவ அதிஸ்ட்டான பீடத்தில் அபிஷேக ஆராதனை மற்றும் மகா குரு பூஜை நடந்தது.பின் அன்னதானம் நடைபெற்றது.குரு பூஜையில் தொகுதி எம்.எல்.ஏ. கீதாஆனந்தன்.காங். கட்சி பிரமுகர்கள் கருணாநிதி. மோகனவேல் உள்ளிட்ட விழாக் குழுவினர்கள் பழனிவேல். முருகானந்தம். சிவானந்தம் மற்றும் கிராமவாசிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.