உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை உற்சவம்

ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை உற்சவம்

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், அன்னபாவாடை உற்சவம் நேற்று நடைபெற்றது.


கொடி மரத்தில் இருந்து, மூலவர் மண்டபம் வரை, அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.மேலும், அன்ன  வகைகள், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மிளகு சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் உட்பட, அனைத்து அன்ன வகைகள் மற்றும் பல வகை சுண்டல்கள், பயத்தம் பருப்பு பாயசம் முதலியன, இறைவனுக்கு படைத்து வழிபட்டனர்.இதற்கான  ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சிவனடியார்கள் செய்திருந்தனர். மனிதன் உண்ணும் உணவு வகைகள் காய்கள், பழங்கள் அனைத்தும், இறைவனுக்கு படைத்து வழிபடுவதை, அன்னப்பாவாடை உற்சவம் என, கருதப்படுகிறது. பின் அந்த பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !