உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வையாவூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி விழா விமரிசை

வையாவூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி விழா விமரிசை

வையாவூர்:காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமம் அருகே, அன்னை இந்திரா  நகரில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.இங்குள்ள அம்மன் கோவிலில்,  ஆண்டு தோறும், ஆவணி திருவிழா நடக்கும்.

நடப்பாண்டு, ஆவணி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.நேற்று முன்தினம் 7ம் தேதி இரவு, மலர் அலங்காரத்தில், முத்துமாரியம்மன் எழுந்தருளி, வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !