புதுச்சத்திரம் தேவி மாரிமுத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர் தேவி மாரிமுத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 5 ம் தேதி காலை 9.00 மணிக்கு, அனுக்ஞை, கணபதி பூஜை, கோ பூஜை, மாலை 5.00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. 7 ம் தேதி மாலை 5.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கரணம், இரவு 7.00 மணிக்கு அங்குரார்பணம், முதல்கால யாகபூஜை துவக்கம், இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
8 ம் தேதி காலை 6.00 மணிக்கு ரக்ஷாபந்தனம், தத்துவார்ச்சனை, ஸபர்சாஹூதி, 7.00 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை துவக்கம், 8.30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, 9.15 மணிக்கு கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு, 10.00 மணிக்கு தேவி மாரிமுத்தாலம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.