உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக பூங்காவில் உள்ள பணித்துறை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று (செப்., 9ல்) நடந்தது. செப். 8 ம் தேதி காலை 5:30 மணிக்கு அனுக் ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால பூஜை துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 2ம் கால யாக பூஜையும், அதை தொடர்ந்து காலை 10:00 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

விழாவில் கலெக்டர் ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேலு உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !