வீட்டில் பறவைகளை வளர்த்தால் பட்சி தோஷம் வருமாமே?
ADDED :2236 days ago
கூண்டில் அடைத்து வைத்து வளர்த்தால் பட்சி தோஷம் என்ன, பட்சி சாபமே வரும். சுதந்திரம் என்ற சொல்லுக்கு பொருளே பறவைகள் தானே! இயல்பாக நம் வீட்டிற்கு வரும் பறவைகளை அவற்றிற்கு பிடித்த உணவு வகைகளை வழங்கி அதன் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தால் அதுதான் ஆனந்தம். இது புண்ணியமும் கூட.