ராமநாமத்தை கோடிமுறை எழுத வேண்டும் என்று ஆசையா?
                              ADDED :2243 days ago 
                            
                          
                           கஷ்டமே இல்லாமல் முடிக்க வேண்டுமென்றால் முப்பதே ஆண்டுகளில் இது சாத்தியம். இவ்வாறு எழுதுவதை ‘ராமகோடி’ என்பர். தினமும் நீராடியதும், பக்திசிரத்தையுடன் தெளிவாக எழுத வேண்டும். ராமகோடி எழுத வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்கள் தினமும் 1000 முறை ‘ராம்’ என்றோ ‘ஸ்ரீராமஜெயம்’ என்றோ எழுதலாம். இவ்வாறு எழுதினால் ராமகோடி பூர்த்தியாக 30 ஆண்டுகள் ஆகும். எழுதிய நோட்டுகளை தெய்வம் போல பாவித்து பூஜையறையில் வைப்பது அவசியம். வெறும் எண்ணிக்கையில் மட்டும் கவனம் இல்லாமல், பக்தியோடு எழுதும்போது இது ஒரு தவமாக மாறிவிடும். இந்த நோட்டுகளை பூஜைஅறையில் ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து வழிபட்டு வந்தால் அந்த புண்ணியம் நம் தலைமுறையினருக்காகவும் காத்து நிற்கும்.