வரதராஜப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்
ADDED :2228 days ago
புதுச்சேரி: வரதராஜப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் துவங்கியது.புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை ேஹாமம் நடந்தது.
தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் திருப்பவித்ரம் சார்த்தப்பட்டது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கும் திருப்பவித்ரம் சார்த்தப்பட்டது.விழாவில் தினசரி காலையிலும், மாலையிலும் ேஹாமம் நடக்கிறது. வரும் 13ம் தேதி, காலை 8:00 மணிக்கு, சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும், மாலை 7:00 மணிக்கு, பெருமாள் திருவீதி புறப்பாடும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி மணவாளன், நிர்வாக அதிகாரி ராஜசேகரன் செய்துள்ளனர்.