மொகரம் விழாவில் தீ மிதித்த ஹிந்துக்கள்
ADDED :2228 days ago
திருப்புவனம் : முதுவன்திடலில், மொகரத்தை முன்னிட்டு, ஹிந்துக்கள் பூக்குழி இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, முதுவன் திடலில், பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதி ஹிந்துக்கள், நிலத்தில் விளையும் தானியங்களை, பள்ளிவாசலுக்கு முதலில் வழங்குவதை, வழக்கமாக கொண்டு உள்ளனர். இங்கு, மத ஒற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில், பல ஆண்டுகளாக மொகரம் பண்டிகையன்று, ஹிந்துக்கள் பூக்குழி இறங்குவர். இதற்காக, ஒரு வாரத்திற்கு முன், காப்பு கட்டி விரதம் இருப்பர். நேற்று, பள்ளிவாசல் முன் அமைத்துள்ள குண்டத்தில், ஆண்கள் தீக்குழி இறங்கியும், பெண்கள், தலையில் நெருப்பு கங்குகளை கொட்டியும், நேர்த்திக் கடன் செலுத்தினர்.