புதுச்சத்திரம் பெருமாள் கோவிலில்சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED :2275 days ago
புதுச்சத்திரம்:பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு மாதந்தோறும் சகஸ் ரநாம அரச்சனை நடப்பது வழக்கம். இம்மாதம் வளர்பிறை ஏகாதசியையொட்டி நேற்று முன் தினம் (செப்., 9ல்) இரவு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
அதனையொட்டி அன்று இரவு 7.00 மணிக்கு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாளுக்கு 1008 விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.