செங்கத்துறை மாகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :2331 days ago
சூலுார்:செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலுார் அடுத்த செங்கத்துறை மாகாளியம்மன் கோவில் பழமையானது.
இங்கு கடந்த, 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (செப்., 9ல்) விநாயகர் பொங்கல் வைத்து பூஜை நடந்தது. சக்தி அழைக்கப்பட்டு, திருக்கல்யாண உற்ச வம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.இன்று (செப்., 11ல்), மாவிள க்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் வழிபாடு நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூவோடு எடுத்தலும் நடக்கின்றன. தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.