உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம்: ஸ்ரீவி., ல் நாளை நடக்கிறது!

ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம்: ஸ்ரீவி., ல் நாளை நடக்கிறது!

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி விழாவை யொட்டி, நாளை (ஏப்.5 ) திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு கடந்த மார்ச் 28ல், கொடியேற்றுடன் துவங்கிய பங்குனி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. எட்டாம் நாளான இன்று இரவு 7மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் தேரில் கடாஷித்தல், நாளை காலை (ஏப்.,5 ) தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில் திருக்கல்யாண பட்டு, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதல் நடக்கிறது. இரவு 6.45 மணிக்கு ஆடிப்பூர மண்டப பந்தலில், ஆண்டாள், ரெங்கமன்னார் மாலை மாற்ற திருக்கல்யாணம் நடக்கிறது. 9 ம் தேதி புஷ்ப யாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !