அமெரிக்காவில் திருப்பதி வெங்கடேஷ்வரர் கல்யாண உற்சவம்!
ADDED :5045 days ago
திருப்பதி : அமெரிக்காவின் 10 நகரங்களில் வெங்கடேஷ்வரர் கல்யாண உற்சவத்தை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 28ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை சான் ஜோஸ், நியூஜெர்சி, டல்லாஸ், அரிசோனா உள்ளிட்ட நகரங்களில் இந்த உற்சவம் நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தான குழு தலைவர் பாபிராஜூ தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டின் இறுதி காலாண்டில் திருப்பதி கோயிலுக்கு ரூ.34 கோடி மதிப்பிலான தங்கம் காணிக்கையாக பக்தர்களால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.