உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம் ஆண்டுவிழா

விழுப்புரம் புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம் ஆண்டுவிழா

விழுப்புரம்:விழுப்புரம் ரயிலடி புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயத்தின் 30ம் ஆண்டு விழா நடந்தது.அதனையயொட்டி நேற்று முன்தினம் (செப்., 9ல்) மாலை 6:00 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில், வில்லியனுார் புனித லுார்து அன்னை திருத்தலம் அதிபர் பிச்சை முத்து, புனித சவேரியார் ஆலயம் பங்குதந்தை ஆல்பர்ட் பெலிக்ஸ், உதவி பங்குதந்தை ஜீவா, கிறிஸ்து அரசர் ஆலயம் உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஆகியோர் அருளாசி வழங்கினர்.இதில், கிறிஸ்துவ மக்கள், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !