உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பொன்னேரி திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, அரசூர் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தர் யவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது.

பாழடைந்து கிடந்த இக்கோவிலில், கோபுரங்கள், விமானங்கள், சன்னிதிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.பணிகள் முடிந்து, நாளை 12ம் தேதி, கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளது.நாளை 12ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் விமானங் களுக்கும், 10:00 மணிக்கு, திருவாலீஸ்வரர், சவுந்தர்யவல்லி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !