மதுரமங்கலத்தில் எம்பார் சுவாமி மண்டபம் பராமரிக்க எதிர்பார்ப்பு
ADDED :2231 days ago
மதுரமங்கலம்: மதுரமங்கலத்தில் உள்ள, எம்பார் சுவாமி அவதார மண்டபத்தை பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மதுரமங்கலத்தில், வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. வைணவ மகான், எம்பார் சுவாமிகளின் அவதார தலமான இக்கோவிலில், ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இந்த கோவிலிலிருந்து, 1 கி.மீ., தொலைவில், எம்பார் சுவாமிகளின் அவதார மண்டபம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், எம்பார் சுவாமிகள் உற்சவ விழாவின் போது, சிறப்பு பூஜை கள் நடைபெறும்.இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், மண்டபத்தின் மேல் பகுதியில் மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மது அருந்தும்இடமாகவும் மாறியுள்ள இந்த மண்டபத்தை, ஹிந்து அறநிலையத் துறையினர் பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர் பார்க்கின்றனர்.