திருவாடானை சிவாலயங்களில் பிரதோஷ விழா
ADDED :2552 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது.
காளை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராள மான பக்தர்கள் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம் போன்ற பக்தி பாடல்களை பாடினர் .தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், திருவெற்றியூர் வன்மீக நாதர் கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.