உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் கருடசேவையில் பெருமாள் வீதியுலா

சேலத்தில் கருடசேவையில் பெருமாள் வீதியுலா

சேலம்: கருடசேவையில் பெருமாள், திருவீதி உலா வந்தார். சேலம், அம்மாபேட்டை, சவுந்த ரராஜ பெருமாள் கோவிலில், 11ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம், கடந்த, 7ல் தொடங்கியது.

ஐந்து நாளாக, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சவுந்தரராஜர், சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து மூலவர், உற்சவர் திருமேனிகளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, புது பவித்ர மாலைகள் சார்த்தப்பட்டன. நேற்று 11ம் தேதி காலை, 5:00 மணிக்கு, பெரிய கருட வாகனத்தில், உற்சவர் சவுந்தர ராஜரை, ராஜ அலங்காரத்தில் எழுந்தருளச்செய்து, முக்கிய வீதிகள் வழியாக, திருவீதி உலா வரச்செய்தனர். தொடர்ந்து, தீர்த்தவாரி, சாற்றுமுறை முடிந்து, பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவடைந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !