உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி அருகே சித்தணி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி அருகே சித்தணி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சித்தணி பூர்ணா புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேம் நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 8ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா கணபதி ஹோமத் துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று 11ம் தேதி காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து 9:30 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்பாடாகி 9:50 மணிக்கு அய்யனார் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இரவு பூர்ணா புஷ்கலா சமதே அய்யனாரப்பன் சுவாமி வாணவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது.புதுச்சேரி சுந்தரேச குருக்கள் தலைமையில் சக்திதரன், கணேஷ் குருக்கள் யாகசாலை பூஜைகளை செய்தனர்.விழா ஏற்பாடுகளை, புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ரங்கசாமி மற்றும் குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள், கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !