உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் வழிபாடு கட்டணம் உயர்த்த முடிவு

பகவதி அம்மன் வழிபாடு கட்டணம் உயர்த்த முடிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், வழிபாட்டு கட்டணத்தை, மூன்று மடங்கு வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.இங்கு நடத்தப்படும் வழிபாடுகளின் கட்டணத்தை, மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டு, அதற்கான விபரங்கள், கோவில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.இதில் ஆட்சேபனை இருந்தால், செப்., 20க்குள் கோவில் அலுவலகத்தில், பக்தர்கள் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !