வீடூர் கோவில் சிலைகள் புதுப்பிக்கும் பணி துவக்கம்!
ADDED :4904 days ago
விழுப்புரம் : வீடூர் திரவுபதியம்மன் கோவிலில் சேதமடைந்த சிலைகள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. திண்டிவனம் தாலுகா, வீடூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழாவின் போது 18 நாட்கள் பாரத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இக்கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலை, அர்ச்சுணன், காத்தவராயன், அம்மன் மற்றும் திரவுபதியம்மன் சிலை உள்ளிட்ட ஏழு சிலைகள் சேதமடைந்த நிலையில் இருந்தது. இவற்றை கிராம பொது மக்கள் சார்பில் புதுப்பித்து வண்ணம் தீட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து இக்கோவிலில் விரைவில் தேர் திருவிழா நடக்கவுள்ளது.