உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டமானடி கோவிலில் பங்குனி மாத உற்சவம்!

கண்டமானடி கோவிலில் பங்குனி மாத உற்சவம்!

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கெங்கையம்மன் கோவில் பங்குனி மாத உற்சவம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 25ம் தேதி கொடியேற்றப்பட்டது. பகல் 11 மணிக்கு ஆழங்கால் நதிக்கரையில் இருந்து பூங்கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடந்தது. அன்று மாலை 1 மணிக்கு சாகை வார்த்தல் விழாவையொட்டி, கூழ் குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலம் வந்து கூழ் ஊற்றி கெங்கையம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஒன்பது நாள் உற்சவத்தில் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் கரகத் திருவிழாவையொட்டி பூங்கர ஊர்வலம் நடந்தது. நேற்று நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கெங்கையம்மன் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !