லட்சுமி குபேரன் கோவிலில் நாளை திருக்கல்யாணம்!
ADDED :4903 days ago
விழுப்புரம் : விழுப்புரம் திருநகர் லட்சுமி குபேரன் கோவிலில் நாளை பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடக்கிறது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு திருநகரில் உள்ள மகாலட்சுமி, லட்சுமி குபேரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை (5ம் தேதி) பங்குனி உத்திர விழாவையொட்டி காலை 9 மணிக்கு தாயார், பெருமாள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனைகளும் நடக்கிறது.