நெகமம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2275 days ago
நெகமம்:நெகமம், எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் ஜி.கோபாலபுரம் கிராம கோவில்களில், கும்பாபி ஷேகம் நேற்று 12ம் தேதி நடந்தது.
நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம் எம்.ஜி.ஆர்., கருப்பராயன் கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.நேற்று 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.
விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நெகமம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல, கொல்லப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.காளியாபுரத்தில் மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பொதுமக்கள் பங்கேற்று மதுரை வீரனை வழிபட்டனர்.