உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடத்துக்குளம் மாரியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்

மடத்துக்குளம் மாரியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கொழுமத்திலுள்ள, மிகவும் பழமை வாய்ந்த  கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி  நடக்கிறது.

கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று 13ம் தேதி காலை, 8:00 மணிக்கு  மங்கள இசையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், விக்னேசுவர  பூஜை, நவகிரக ஹோமம், தனபூஜையும் நடக்கிறது. நாளை (14ம் தேதி) காலை,  யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, தீபாராதனையும், வரும் 15ம் தேதி  காலை, இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராய ணம், அஷ்ட பந்தன மருந்து  சாத்துதல், மூன்றாம் கால யாகபூஜை, மூலமந்திர ஹோமம்  நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 16ம் தேதி அதிகாலையில்  நான்காம் கால யாக பூஜையும், காலை, 5:00 முதல் 5:30 மணிக்குள் கோவில்  ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 5:30 முதல் 6:00  மணிக்குள் விநாயகர், கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வ  கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

மகா மாரியம்மன்:உடுமலை, தும்பலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது, மகாமாரியம்மன், உச்சிமாகாளி அம்மன் கோவில். கோவில் வளாகத்தில் கட்டடங்கள் புதுப்பிப்பு, பரிவார தெய்வங்களான, ஆதிசிவன், கருப்பராயன், கன்னிமார்தேவி, துர்க்கையம்மன், முனீஸ்வரன், சவுடேஸ்வரி அம்மன் மற்றும் வேட்டைகாரசாமி சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன.

திருப்பணி நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் (செப்., 11ல்) காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று 12ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடந்தன.இன்று 13ம் தேதி காலை, 5:45 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

காலை, 7:55 மணிக்கு, கோபுர விமானத்துக்கும், 8:15 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக் கிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நாளை 14தேதி முதல் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !