ஆர்.எஸ்.மங்கலம் அருகே விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2408 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே இரட்டையூரணி விநாயகர் கோவில் கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக அனுக்கை, விக்னேஸ்வரர் வழிபாடு நடைபெற்றன.
பின்னர் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டதுடன், பால், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபி ஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின் நடந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இரட்டையூரணி கிராமத்தினர் செய்திருந்தனர்.