சற்குரு பெருமாள் கோவிலில் ஸ்ரீராமநவமி உற்சவ திருவிழா
ADDED :4903 days ago
பேரூர் : பேரூர் அருகே, போஸ்டல் காலனியிலுள்ள, ஸ்ரீசற்குரு பெருமாள்கோவிலில், ஸ்ரீராமநவமி உற்சவ விழா, நடந்தது. மார்ச் 31ம்தேதி, காலை, 8.00 மணிக்கு, ஸ்ரீசீதா, ராமர், லட்சுமண, ஆஞ்சநேய உற்சவ மூர்த்திகளின், அபிஷேக ஆராதனையுடன், விழா துவங்கியது. ஸ்ரீராமஜெய லட்சார்ச்சனைக்குப்பின், உற்சவ மூர்த்திகளின், திருவீதி உலா, சங்கு, சேகண்டி முழக்கத்துடன், போஸ்டல்காலனியின், முக்கிய வீதிகளின் வழியே வந்து, ஆஞ்சநேயர் திருக்கோவிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை, அர்ச்சகர் சற்குருராஜா, நிர்வாகி கவிதா தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.