காட்டுவனஞ்சூரில் மாரியம்மன் தேர்த்திருவிழா
ADDED :2183 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம், காட்டு வனஞ்சூரில் மாரியம்மன் தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 10 ம் தேதி கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், இதற்கடுத்து ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, கடந்த 14 ம் தேதி காலை அம்மனுக்கு பால்,தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.