உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட சிறப்பு கூட்டம்

ராஜபாளையத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட சிறப்பு கூட்டம்

ராஜபாளையம்:ராஜபாளையம் வேட்டை பெருமாள் கோயில் அருகே பத்ம மகால்  திருமண மண்டபத்தில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க  மாவட்ட சிறப்பு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள்  பிரகாஷ், பொருளாளர் கந்தகிருஷ்ணன், வேள்விகுழு ராமசாமி, இளைஞர் அணி  பிரபாகரன், ராஜபாளை யம் வட்ட தலைவர் வெங்கடேஷ் ராஜா உள்ளிட்ட  நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லட்சார்ச்சனை, நவராத்திரி, அமாவாசை நிகழ்ச்சிகளை சிறப்பாக  கொண்டாடு வதை பற்றி நிர்வாகிகள் விவாதித்தனர்.மன்றங்களின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை,  விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், திருச்சுழி, ராஜபாளையம் உள்ளிட்ட  மாவட்டத்திலுள்ள 82 மன்றங்களிலி ருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் பத்ம நாபன் தலைமையில் வழிப்பாட்டு மன்ற  உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !