உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில், பல நுாறு ஆண்டுகள், பழமை வாய்ந்தது. இங்குள்ள அம்மன் லிங்கம் வடிவில் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.

இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 13ம் தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. 14 ம் தேதி காலை, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, தீபாராதனையும், 15ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, வேத பாராயணம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மூன்றாம் கால யாகபூஜை, மூலமந்திர ேஹாமம் நடந்தன. நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜைக்கு பின், காலை 5:00 மணிக்கு ராஜகோபுரத்துக்கும், கோட்டை மாரியம்மன், விநாயகர், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்காரபூஜை, அன்னதானம் நடந்தன. இதில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரப்பகுதியிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !