சேத்தியாத்தோப்பு பெரியநாயகி கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :2240 days ago
சேத்தியாத்தோப்பு: பின்னலுார் பெரியாண்டவர், பெரியநாயகி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு, 15ம் தேதி மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
இரவு 9.00 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது.
முதற்கால யாக சாலை ஆரம்ப நிகழ்ச்சி, ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று 16ம் தேதி அதிகாலை 6.00 மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜை, கோ பூஜை, தன பூஜை, 9.00 மணிக்கு யாகசாலையில் கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு பெரியாண்டவர், பெரியநாயகி ஆலய விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை குலதெய்வ வழி பாட்டு குடும்பத்தினர் மற்றும் பின்னலுார் கிராம பொதுமக்கள் செய்தனர்.