நெல்லிக்குப்பம் வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2294 days ago
நெல்லிக்குப்பம்: வெள்ளப்பாக்கம் வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று 16ம் தேதி நடந்தது. கடந்த 14ம் தேதி வேதபிரபந்தம் தொடங்கியது.15ம் தேதி காலை முதல் கலசா பிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று 16ம் தேதி காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி தீபாரா தனை நடந்து, கும்பம் புறப்பாடாகி காலை 9.50 மணிக்கு வரதராஜப் பெருமாள், தாயார், கோதண்டராமர், ஆண்டாள், அனுமன் சன்னதிகள் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடந்தது. இரவு சுவாமி வீதிஉலா நடந்தது. பூஜைகள் வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில் நடந்தது.