உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

கோபி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா

கோபி: கோபி பெருமாள் கோவில் வீதியில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ  பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக முதலாமாண்டு விழா, நேற்று 16ம் தேதி நடந்தது.  

இதையொட்டி விஷ்வக்ஷன ஆராதனை, அனுக்ஞை, கோ - பூஜை,  மகாதீபாராதனை நடந்தது. அக்ரஹார வீதி, பெருமாள் கோவில் வீதி, சரவணா  தியேட்டர் சாலை, வாஸ்து நகர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழா  ஏற்பாடுகளை, தக்கார் நாகராஜ், செயல் அலுவலர் சாந்தா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !