கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :2220 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சாதிநாயக்கன்பட்டி அடுத்த பள்ளம் கிராமம், மாரி யம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று (செப்., 16ல்) நடந்தது.
முன்னதாக சுவாமிக்கு கரிகால ஊர்வலம், கங்கை பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, வேத விற்பனர் குழுவின் சார்பில், நீலகண்ட சாஸ்திரியால் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில், வள்ளூர்குட்டை ஓம்சக்தி நாடகக்கலை குழுவின் சார்பில், கருமாரியம்மன் சிறப்பு நாடகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.