பாலக்கோடு மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று 16ம் தேதி நடந்தது. பழமை வாய்ந்த இக்கோவிலை புதுப்பிக்கும் பணி, கடந்த, மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது.
இப்பணி முடிந்து, நேற்று 16ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 12 கொடி யேற்ற நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை நடந்தன. நேற்று முன்தினம் 15ம் தேதி இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று 16ம் தேதி காலை, 4:30 மணிக்கு, கலச ஆராதனை நடந்தது. 8:00 மணிக்கு மேல், இக்கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.