பனமரத்துப்பட்டி வட பத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2316 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, காளியாக்கோவில் புதூர் கிராமத்தில், வடபத்ர காளியம்மன் கோவில், திருக்குட நன்னீராட்டு பெரு விழா நேற்று 16ம் தேதி, நடந்தது.
ஞாயிறு காலை தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, மருந்து சாத்துதல், யாகம் உள்ளிட்ட நிகழ்வு நடந்தது. நேற்று 16ம் தேதி, காலை, விநாயகர், கருப்பு சாமி மற்றும் வடபத்திர காளியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.