வீரபாண்டி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2269 days ago
வீரபாண்டி: சக்தி விநாயகர், பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆட்டை யாம்பட்டி அருகே, ராஜாபாளையம் பஞ்., பெத்தாம்பட்டி சக்தி விநாயகர், பெரிய மாரியம்மன், மேச்சேரியம்மன், கருங்காளியம்மன், கடகடப்பான் கோவில்களின் கும்பாபிஷேக விழா, கடந்த, 14ல் துவங்கியது.
நாள்தோறும், சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று 16ல் , நான்கு கால யாக சாலை பூஜைகள் நிறை வடைந்தன. பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களுடன், சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். காலை, 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர் வாகிகள், ராஜாபாளையம், பெத்தாம்பட்டி மக்கள் செய்திருந்தனர்.