உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் திறக்கப்படாத முடி காணிக்கை மண்டபம்

திருத்தணி முருகன் கோவிலில் திறக்கப்படாத முடி காணிக்கை மண்டபம்

திருத்தணி : திருத்தணி, முருகன் மலைக்கோவிலில், 1 கோடி ரூபாய்  மதிப்பீட்டில், முடி காணிக்கை மண்டபம் கட்டி முடித்து, திறக்கப்படாமல் உள்ளது.

திருத்தணி, முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி, பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிப்பர். முடி காணிக்கை செலுத்த  மலைக்கோவிலில் நிரந்தர கட்டடம் இல்லை.

தற்போது, மாடவீதியில் இலவச கழிப்பறை கட்டடம் அருகே, குறுகிய இடத்தில் முடி காணி க்கை இயங்கி வருகிறது.இதையடுத்து, பக்தர்கள் நலன் கருதி முடி காணிக்கை மண்டபம், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே, கடந்தாண்டு மே மாதம் முதல் பணிகள் துவங்கப்பட்டன.இரண்டு மாதங்களுக்கு முன், நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், நவீன காணிக்கை மண்டபம் திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து,  கோவில் அதி காரி ஒருவர் கூறியதாவது:மலைக்கோவிலில், 1 கோடி ரூபாய்  மதிப்பீட்டில், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள், தற்போது தான்  முடிந்துள்ளன. இங்கு, முடி காணிக்கை செலுத் தும் அறை, கழிப்பறை, குளியல்  அறை மற்றும் ஆடைகள் மாற்றும் இடம் என, தனித் தனியாக பக்தர்கள்  வசதிக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பெற்று, விரைவில் திறந்து,  பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !