உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாஜாபாத் கிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் கிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் : ராதா, ருக்மணி சமேத, கிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம்,  நேற்று 16ல், விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி  அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவில்,  புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இதன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (செப்., 15ல்) மாலை, கணபதி பூஜை யுடன், முதல் கால பூஜை நடந்ததுநேற்று 16ல் காலை, இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, காலை, 9:45 மணிக்கு, கலசப் புறப்பாடு முடிந்து, 10:10 மணிக்கு, கோவில் கலசத்தின் மீது, சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !