உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுாரில் சமண கோவில்கள்

ஸ்ரீபெரும்புதுாரில் சமண கோவில்கள்

சேந்தமங்கலம் : கண்ணை கவரும், அழகிய கலைநயமிக்க சமண கோவில்கள்,  ஸ்ரீபெரும் புதுார் சுற்று வட்டாரத்தில், அதிகம் கட்டப்பட்டு வருகின்றன.

சமண மதத்தில், 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர். இதில், ரிஷபர் என்பவர் முதல்  தீர்த்தங்கர ராகவும், மகாவீரர், 24-வது தீர்த்தங்கரராகவும் அறியப்படுகிறார்.

இவர்களுக்கு, பல இடங்களில் கோவில் கட்டி வழிபாடு செய்யப்படுகிறது. பெரும்பாலும், வட மாநிலத்தில், தீர்த்தங்கரர்களுக்கு அதிக கோவில்கள் இருக்கும்.தற்போது, தமிழகத்தில், வட மாநிலத்தவர்களின் அதிகரிப்பால், சமண மத கோவில்களும், பல இடங்களில் கட்டப் படுகின்றன.

இதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டத்தில், பல இடங்களில், சமண  கோவில்கள், கண்ணை கவரும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன்  அமைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !