செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நிறைவு
ADDED :2366 days ago
பல்லடம்: பொள்ளாச்சி ரோட்டில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு, செப்., 2 விநாயகர் சதுர்த்தி அன்று, கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 12 நாட்களாக, தினசரி சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது.
முன்னதாக, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பால், இளநீர், பன்னீர், தேன், தயிர், மஞ்சள், மற்றும் சந்தனம் உள்ளிட்டவற்றால், விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.