பழநி முருகன் கோயில் நவராத்திரி விழா: செப்.,29ல் துவக்கம்
ADDED :2218 days ago
பழநி, பழநி முருகன் கோயிலில் நவராத்திரி விழா செப்.,29ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கி அக்.,8 வரை நடக்கிறது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் செப்.,29ல் காப்புகட்டுதல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலும், மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு காப்புக் கட்டப்படும்.பெரியநாயகியம்மன் கோயிலில் நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு மாலையில் அபிஷேகம்,அலங்காரம் செய்து பூஜைகள் நடக்கிறது.அக்.,8ல் விஜயதசமி அன்று கோதைமங்கலம் சிவன்கோயிலில் அம்பு, வில் போட்டு சூரனை வதம் செய்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.