உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் பாலமலையில் வரும் 22ல் திருப்படி விழா

கரூர் பாலமலையில் வரும் 22ல் திருப்படி விழா

கரூர்: க.பரமத்தி அடுத்த, பவித்திரம் அருகே, பாலமலையில், பாலசுப்பிரமணிய  சுவாமி கோவில் உள்ளது. இதில் வரும், 22ல், திருப்புகழ் திருப்படி விழா  நடக்கிறது. அன்று காலை, 7:30 மணிக்கு, சுந்தர பாராயணத்துடன், மலை  கிரிவலம், 8:00 மணிக்கு விநாயகர் வழிபாடு செய்து, அனைத்து படிகளுக்கும்,  திருப்புகழ் பாடி திருப்படி பூஜை நடக்கிறது.

அதையடுத்து, குமாரசாமி நாத தேசிகர் குழுவினர், சின்னமனூர் பாண்டியன் ஆகியோரின் ஆன்மிக சொற் பொழிவு நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடக்கிறது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, பாலமலை திருப்படி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !